Top
undefined
Begin typing your search above and press return to search.

சச்சின், ரோஹித் சர்மாவிற்கு சவால் விட்ட யுவராஜ் சிங் - சவாலை ஏற்பார்களா?

சச்சின், ரோஹித் சர்மாவிற்கு சவால் விட்ட  யுவராஜ் சிங் - சவாலை ஏற்பார்களா?

Vignesh KBy : Vignesh K

  |  16 May 2020 12:04 PM GMT

கொரோனா வைரஸ் காரணத்தால் அனைத்து விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் சக வீரர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் உரையாடி வருகிறார்.

இந்த சமயத்தில் யுவராஜ் ஒரு வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்: அந்த வீடியோவில் கிரிக்கெட் பேட்டில் பந்தை விடாமல் தட்டிக்கொண்டே விளையாடினார். இதனை சவாலாக ஏற்க வேண்டும் என சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா மற்றும் ஹர்பஜன் சிங்க்கு இதைப் போல் செய்து வீடியோவை பதிவிட வேண்டும் என கேட்டுள்ளார்.



மேலும் சச்சின் டெண்டுல்கரும் ரோகித் சர்மாவும் சிறந்த பேட்ஸ்மேன்கள். அதனால் இவர்களுக்கு இந்த சவால் எளிதாக இருக்கும். ஆனால் ஹர்பஜன்சிங் ஒரு பந்து வீச்சாளர் அவருக்கு சிரமமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story