Top
undefined
Begin typing your search above and press return to search.

சச்சின் சதம் அடிப்பார் என நினைத்தேன் - சோயப் அக்தர்.!

சச்சின் சதம் அடிப்பார் என நினைத்தேன் - சோயப் அக்தர்.!

Vignesh KBy : Vignesh K

  |  19 May 2020 11:08 AM GMT

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் சதம் அடிப்பார் என விரும்பினேன் சோயப் அக்தர் .

கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 273 ரன்கள் அடித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 276 ரன்கள் அடித்து அந்த போட்டியில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்கள் அடித்தார். ஆனால் சோயப் அக்தரின் பவுன்சர் பந்தல் அவருடைய விக்கெட்டை எடுத்தார்.

இதனை பற்றி அக்தர் கூறியது: அந்த போட்டியில் சச்சின் சதம் அடித்து இருப்பார். ஆனால் 98 ரன்களில் அவுட் ஆனது வருத்தம் அளிக்கிறது. நான் வீசிய பவுன்சர் பந்தை சிக்ஸர் அடித்து சதம் அடிப்பார் என்று நினைத்தேன். ஆனால் விக்கெட்டை வீழ்ந்து விட்டது. ஏனெனில் இதற்கு முன்பு நான் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்தார்.

மேலும், சச்சினை கோலியை ஒப்பிடுவது தவறானது. இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் விளையாடுகின்றனர். சச்சின் கடினமான நேரத்தில் பேட்டிங் செய்தார். தற்போது விளையாடி இருந்தால் 1.30 லட்சம் ரன்கள் மேல் அடித்து இருப்பார்.

இவ்வாறு சோயப் அக்தர் கூறினார்.

Next Story