Top
undefined
Begin typing your search above and press return to search.

இவர் தான் என்னை சாதிக்க தூண்டினார் - ரோஹித் சர்மா.!

இவர் தான் என்னை சாதிக்க தூண்டினார் - ரோஹித் சர்மா.!

Vignesh KBy : Vignesh K

  |  20 May 2020 1:21 PM GMT

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என யுவராஜ் சிங் விரும்பினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை எடுத்தார். இது தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் இரட்டை சதம்.

பின்பு 2011ஆம் ஆண்டு இந்தூரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சேவாக் 219 ரன்கள் விளாசினார். பின்னர் சச்சினின் ரெக்கார்டை சேவாக் முறியடித்தார். பெங்களூருவில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 209 ரன்கள் அடித்தார். ஆனால், அவரால் ஷேவாக் சாதனையை முறியடிக்க முடியவில்லை.

பின்னர் அதிரடியாக விளையாடி அவர் இலங்கையுடன் 2014ஆம் ஆண்டு 264 ரன்கள் மற்றும் 2017 ஆம் ஆண்டு 208 ரன்கள் அடித்தார் இதனால் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தாவர் ரோகித் சர்மா. மேலும் இவர் ஒருவரே மூன்று முறை ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தவர்.

முதல் வட்டி இரட்டை சதம் அடித்தது பற்றி இன்ஸ்டாகிராமில் அஸ்வின் உடன் உரையாடலில் ரோகித் சர்மா கூறியது: முதன் முறையாக இரட்டை சதம் அடித்துவிட்டு பில்லியன் திரும்பிய போது என்மீது பலரும் கோபத்தை காட்டினார். ஏனென்றால் கூடுதலாக 10 அல்லது 15 ரன்கள் அடித்திருந்தார் சேவாக்கின் சாதனையை முறியடித்து இருக்கலாம் என்றனர். அதில் யுவராஜ் சிங் மற்றும் ஷிகர் தவான் முக்கியமாக இருந்தனர்.

இவ்வாறு ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

Next Story