Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த இந்தியா வீரர் தான் ஐ.சி.சி தலைவராக வரவேண்டும் - கிரீம் சுமித்.!

இந்த இந்தியா வீரர் தான் ஐ.சி.சி தலைவராக வரவேண்டும் - கிரீம் சுமித்.!

Vignesh KBy : Vignesh K

  |  22 May 2020 1:39 PM GMT

தற்போது ஐ.சி.சி தலைவராக இந்தியாவின் ஷசாங் மனோகர் உள்ளார். அவருடைய பதவிக்காலம் குறைந்த காலத்தில் முடிய உள்ளது. இதனால் அடுத்த ஐசிசி தலைவர் பதிவுக்கு சௌரவ் கங்குலி தான் கச்சிதமானவர், அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரரும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனருமான கிரீம் சுமித் கூறியுள்ளார்.


இதனைப் பற்றி அவர் கூறியது: கொரோனா வைரஸ் குறைந்த பின்னர் ஐசிசி தலைவர் பதவிக்கு வலிமையான ஒருவர் தேவை. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு கச்சிதமானவர். இந்த பதவிக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் நல்ல அனுபவம் கொண்ட சவுரவ் கங்குலி போன்ற தலைவர்தான் வரவேண்டும். மேலும் அவர் கிரிக்கெட்டை முன்னேற்றப் பாதையை நோக்கி கொண்டு செல்வார் என கிரீம் சுமித் கூறினார்.

Next Story