Top
undefined
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டில் நடக்கும் லீக் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் - ராபின் உத்தப்பா.!

வெளிநாட்டில் நடக்கும் லீக் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் - ராபின் உத்தப்பா.!

Vignesh KBy : Vignesh K

  |  23 May 2020 12:37 PM GMT

ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) இந்த டி20 போட்டி கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவார்கள். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு மட்டும் அனுமதி கிடையாது.

இந்தியாவின் ஐ.பி.எல் போட்டி போல் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக், தென்ஆப்பிரிக்காவில் மான்சி சூப்பர் லீக், வங்காள தேசத்தில் வங்காளதேசம் பிரிமீயர் லீக்

ஆகிய டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தப் வெளிநாட்டில் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

மேலும், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஐ.பி.எல் போட்டி உள்பட அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதனால் இவரை கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டார். இதேபோல் பிற வீரர்களும் வீரர்களையும் அனுமதிக்க வேண்டும் என ராபின் உத்தப்பா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனை பற்றி அவர் கூறியது: வெளிநாட்டில் நடக்கும் டி20 போட்டியில் விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்காவிட்டால் பெரும் பாதிப்பை உண்டாகும். ஒரு ஆண்டிற்கு லீக் போட்டியில் விளையாட அனுமதி கொடுத்தால் சிறப்பாக இருக்கும். மேலும் கற்றுக்கொள்வதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story