Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஆலோசனை - பிரித்வி ஷா.!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஆலோசனை - பிரித்வி ஷா.!

Vignesh KBy : Vignesh K

  |  27 May 2020 1:46 AM GMT

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய தகவலை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும்கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். மேலும் தங்களின் பொழுதுபோக்கை வீட்டில் ஏதாவது வேலை செய்தும், சமூக வலைத்தளங்கள் மூலம் கழித்து வருகின்றனர்.


அந்த வரிசையில் தற்போது இன்ஸ்டகிரம் கலந்துரையாடலில் பிரித்வி ஷா கூறியது: இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் அவர்களை முதன் முதலில் என்னுடைய எட்டாவது வயதில் பார்த்தேன். அப்போதிலிருந்து என்னுடைய ஆலோசகராக இருந்து வருகிறார். போட்டியின் போது உள்ளேயும், வெளியேயும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ஆகியவற்றை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

நான் பயிற்சியில் விளையாடும் போது சச்சின் அவர்கள் அங்கு வந்தார் என்னிடம் வந்து பேசுவார். மேலும் மனதளவில் ஆட்டத்தை எப்படி எதிர் கொள்வது பற்றி ஆலோசனை செய்வார் என பிரித்வி ஷா கூறினார்.

Next Story