Top
undefined
Begin typing your search above and press return to search.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் முககவசங்களை வழங்கிய - இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி.!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் முககவசங்களை வழங்கிய - இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி.!

Vignesh KBy : Vignesh K

  |  2 Jun 2020 11:21 AM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இத வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து உள்ளது.

இந்த வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளர் முகமத் ஷமி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் முககவசங்களை கொடுத்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலையில் ஷமி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் மற்றும் முக கவசங்களையும் வழங்கியுள்ளார். பின்பு இவரது இல்லத்தில் உணவை விநியோகம் செய்து வருகிறார்.

இவர் உதவிகளை செய்யும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது..

Next Story