Top
undefined
Begin typing your search above and press return to search.

கேப்டன் கோலியிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் - இந்திய பவுலர் குலதீப் யாதவ்.!

கேப்டன் கோலியிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் - இந்திய பவுலர் குலதீப் யாதவ்.!

Vignesh KBy : Vignesh K

  |  4 Jun 2020 1:15 PM GMT

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் குலதீப் யாதவ். இவர் ஒருநாள், டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு பிடித்தமான பவுலர்.

இந்த கொரோனா வைரஸ் காரணத்தால் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களுடைய வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது குல்திப் யாதவ் கூறியது: இந்த ஊரடங்கு உத்தரவு பலருக்கு கஷ்டமாக உள்ளது. ஆனால், எனக்கு ஓய்வு எடுப்பதற்கு அதிக நாட்கள் கிடைத்துள்ளது. இதனால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளேன் மற்றும் குடும்பத்துடன் அதிக நேரம் கழித்து வருகிறேன் எனக் கூறினார்.

சிறப்பாக உடற்பயிற்சியை செய்து வருகிறேன் மற்றும் பிசிசிஐ டிரைனர் கொடுத்த அட்வைசை பின்பற்றி வருகிறேன். பந்து வீசும் சமயத்தில் கேப்டன் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும். கேப்டன் கோலி இடமிருந்து நெருக்கடியான சூழ்நிலையை எப்படி கையாளுவது என்பதை பற்றிய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மேலும், இளம் வீரர்களை ஊக்குவிக்க செய்வர் மற்றும் நம்முடைய திறமைகளை அவர் வரவேற்பார். இந்திய அணியில் புதிதாக வருபவர்களுக்கு அதிக ஆதரவு கொடுப்பார் மற்றும் அனைத்து வீரர்களையும் பற்றி அறிந்து கொள்வார்.

இவ்வாறு குலதீப் யாதவ் கூறியுள்ளார்.

Next Story