Top
undefined
Begin typing your search above and press return to search.

கோலி உடனான நட்பு மிக சிறப்பானது - கேன் வில்லியம்சன்.!

கோலி உடனான நட்பு மிக சிறப்பானது - கேன் வில்லியம்சன்.!

Vignesh KBy : Vignesh K

  |  8 Jun 2020 11:51 AM GMT

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடனான நட்பு மிக சுவாரஸ்யமானது என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலியும் மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் விளையாடினர். ‌ அந்த சமயத்தில் இருந்து இருவருக்கும் இடையேயான நட்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது. அந்த ஆண்டின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் கோலியின் தலைமையில் இந்தியா வென்றது.


இதனைப்பற்றி வில்லியம்சன் கூறுகையில்: நாங்கள் இருவரும் எதிர் அணிகளாக விளையாடி வருகிறோம். எங்களுடைய இளம் வயதில் இருந்து இருவரும் சந்தித்து வருகிறோம். அப்போதிலிருந்து விராட் கோலியின் முன்னேற்றத்தை பார்த்து வருகிறேன் அது மிகவும் சிறப்பாக உள்ளது.

நாங்கள் பல வருடமாக ஒருவருக்கொருவர் எதிர் அணிக்காக விளையாடி வருகிறோம். இது ஒரு சுவாரஸ்யமானது. ஆனால், சமீப ஆண்டுகளாக தான் நாங்கள் விளையாட்டைப் பற்றி தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறோம். மேலும், போட்டியின் போது எங்களுடைய பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கலாம். அது எங்களுடைய தனித்துவமானது.

இவ்வாறு கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

Next Story