Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒரு முறையாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் - இந்திய சுழல் பந்து வீச்சாளர் சஹல்!

ஒரு முறையாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் - இந்திய சுழல் பந்து வீச்சாளர் சஹல்!

Vignesh KBy : Vignesh K

  |  12 Jun 2020 1:15 PM GMT

ஒரே ஒரு முறையாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என இந்திய சுழல் பந்துவீச்சாளர் யுவேந்திர சஹல் தெரிவித்துள்ளார்.

சஹல் இதுவரை இந்திய அணிக்காக 52 ஒருநாள் போட்டி, 42 டி20 போட்டியில் விளையாடி உள்ளார். ஆனால், இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட அவர் விளையாட வில்லை. இதனைப் பற்றி அவர் கூறியது: ஒரே ஒரு முறையாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். இல்லையென்றால் டெஸ்ட் அணியில் ஆவது இடம்பிடிக்க வேண்டும்.

நானும் குல்தீப் யாதவும் இளம் வயதில் இருந்து இந்திய அணிக்கு ஒன்றாக விளையாடி வருகிறோம் மற்றும் ஒன்றாக பந்துவீசி வருகிறோம். நாங்கள் இருவரும் வீசும் பந்துகளை பேட்ஸ்மென்கள் எதிர் கொண்டு இருப்பார்கள். நான் சிறப்பாக பந்துவீசினால் குல்தீப் யாதவுக்கு விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


விராட் கோலி அல்லது ரோகித் சர்மா இருவரில் யார் கேப்டனாக இருந்தாலும் விக்கெட்டுகள் எடுக்கவேண்டும் என எங்களிடம் தெரிவிப்பார்கள். 10 ஓவர்கள் வீசி, 70 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினால் கூட அது அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு சஹல் கூறியுள்ளார்.

Next Story