Top
undefined
Begin typing your search above and press return to search.

எம்.எஸ் டோனி கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் - மேற்கிந்தியத் தீவு வீரர் டுவைன் பிராவோ.!

எம்.எஸ் டோனி கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் - மேற்கிந்தியத் தீவு வீரர் டுவைன் பிராவோ.!

Vignesh KBy : Vignesh K

  |  13 Jun 2020 12:26 PM GMT

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி கிரிக்கெட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என மேற்கிந்திய தீவு அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும்கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். மேலும் தங்களின் பொழுதுபோக்கை வீட்டில் ஏதாவது வேலை செய்தும், சமூக வலைத்தளங்கள் மூலம் கழித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அணிக்கு திரும்ப வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதால் அவர் இடம் பிடிப்பது நடக்கவில்லை. இந்த ஊரடங்கு சமயத்தில் பல வீரர்கள் எம்.எஸ் டோனி உடன் ஏற்பட்ட நிகழ்வுகளை சமூக வளையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் பிராவோ டோனியை பற்றி பேசியுள்ளார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் போம்மி பாங்வாவிடம் இன்ஸ்டாகிராமில் பிராவோ உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியது: சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு டோனி மற்றும் பயிற்சியாளர் ஃபிளெமிங்கையே காரணம். அந்த அணியின் உரிமையாளர்கள் இந்த இருவரும் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். சிஎஸ்கே அணியின் வீரர்கள் டோனியின் மீது அன்பு வைத்துள்ளனர். எங்கள் அணி மிக சிறப்பானது.

மேலும் டோனி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் மிக எளிதாக பேச முடியும். போட்டிக்கு வெளியே வீடியோகேம் விளையாடிக் கொண்டிருப்பார். அவருடைய அறை எப்போதும் திறந்தே இருக்கும். அவர் மிகவும் தன்னடக்கம் கொண்டவர். சிஎஸ்கே அணி ஒரு சிறப்பானது மற்றும் முக்கியமாக எங்களுக்கு மிக நம்பிக்கையான ரசிகர்கள் உள்ளனர் என தெரிவிதுள்ளார்.

Next Story