Top
undefined
Begin typing your search above and press return to search.

எம்.எஸ்.தோனியின் பேட்டிங் திறமையை கண்டு வியந்தேன் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி!

எம்.எஸ்.தோனியின் பேட்டிங் திறமையை கண்டு வியந்தேன் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி!

Vignesh KBy : Vignesh K

  |  19 Jun 2020 1:08 PM GMT

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கல் ஹஸ்ஸி. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது சென்னை அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் டோனி உடனான அனுபவங்களை பற்றி கூறியுள்ளார்.

எம்.எஸ் டோனி என்னை விட சிறந்த கண்காணிப்பாளர் மற்றும் அவரிடம் இருக்கும் திறமைகள் என்னிடம் இல்லை என சில நாட்களுக்கு முன்பு ஹஸ்ஸி பாராட்டி இருந்தார். தற்போது டோனியின் சிறந்த ஆட்டத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் ரஷீத் கான் சிறப்பாக பந்துவீசினர். அவருடைய சிறப்பான பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்க்க முடியாமல் இருந்துள்ளனர்.

அப்போது 140 ரன்கள் அடிக்க வேண்டிய சமயத்தில் 24 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து இருந்தது. அந்த சமயத்தில் டோனி களம் இறங்கி இருந்தார். அப்போது ரஷீத் கான் வீசிய சுழல் பந்தை டோனி பவுண்டரி அடித்தார். அந்த திறமையை கண்டு வியந்தேன். அவர் என்னை பார்த்து நான் என்னுடைய ஸ்டைலிலேயே விளையாடுகிறேன் என தெரிவித்தார்.

இவ்வாறு மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

Next Story