Top
undefined
Begin typing your search above and press return to search.

என்னுடைய அணிக்கு எம்.எஸ் டோனி தான் கேப்டன் - ஏ.பி டி வில்லியர்ஸ்.!

என்னுடைய அணிக்கு எம்.எஸ் டோனி தான் கேப்டன் - ஏ.பி டி வில்லியர்ஸ்.!

Vignesh KBy : Vignesh K

  |  3 July 2020 12:30 PM GMT

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவருடைய ஐபில் லெவன் அணிக்கு நிரந்தரமான கேப்டனாக எம்.எஸ் டோனியை தேர்வு செய்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏபி டிவில்லியர்ஸ் கூறியதாவது: அவருக்குப் பிடித்த வீரர்களைக் கொண்டு ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் அவருடைய பெயரும் இருக்க வேண்டும் என்பது விதி முறையில் உள்ளது.

அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக வீரேந்திர ஷேவாக்கும் மற்றும் ரோகித் சர்மாவும் தேர்வு செய்தார். இதன் பின்னர் மூன்றாவது இடத்திற்கு விராட் கோலி தேர்வு செய்துள்ளார். நான்காவது இடத்திற்கு அவரை(ஏபி டிவிலியர்ஸ்) தேர்வு செய்தார்.


இதன் பிறகு ஐந்தாவது இடத்திற்கும் மற்றும் கேப்டன் பதவிக்கும்எம்.எஸ் டோனியை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், ரபாட, பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

மேலும் எம்எஸ் டோனியை என்னுடைய ஐபிஎல் லெவன் அணிக்கு நிரந்தர கேப்டனாக தேர்வு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Next Story