Top
undefined
Begin typing your search above and press return to search.

கீப்பிங்கில் எம்.எஸ் தோனி இருந்தால் எனக்கு கவலை இல்லை - சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்!

கீப்பிங்கில் எம்.எஸ் தோனி இருந்தால் எனக்கு கவலை இல்லை - சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்!

Vignesh KBy : Vignesh K

  |  4 July 2020 2:50 PM GMT

எம்.எஸ் டோனி கீப்பிங்கில் இருந்தால் பில்டர்களை எந்த இடத்தில் நிற்க வைக்க வேண்டும் என்கிற கவலை எனக்கு இல்லை என இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பின்னர் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் எம்.எஸ் டோனி விளையாடவில்லை. இதனையடுத்து அவர் ஓய்வு பெறுவார் என பல கருத்துக்கள் வெளிவந்தது. டோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என ரசிகர்கள் பெருமளவில் காத்திருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணத்தினால் ஐபிஎல் போட்டி தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்பிஎன் கிரிகெட் இன்ஃபோ இணையதளத்துக்கு பேட்டி கொடுத்த குல்தீப் யாதவ்:,அதில் அவர் பேசியது: நான் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆரம்பித்த போது போட்டியை பற்றி கணிப்பதில் தடுமாற்றத்தில் இருந்தேன். ஆனால், எம்.எஸ் டோனி உடன் விளையாட தொடங்கியவுடன் எனக்கு போட்டியை பற்றி சரியான புரிதல் கிடைத்தது. நான் பந்து வீசும் சமயத்தில் எனக்கு ஆலோசனை செய்து கொண்டு இருப்பார்.


மேலும், எம்.எஸ் டோனி பில்டர்களை எந்த இடத்தில் நிற்க வைப்பது என்பது பற்றி நன்றாக தெரிந்து கொண்டவர். நான் பந்துவீசும் சமயத்தில் அவர் கீப்பிங் செய்திருந்தால் சரியான இடத்தில் பில்டர்களை நிறுத்தி வைப்பார். இது பேட்ஸ்மேனின் விக்கெட்டை எடுப்பது எளிதாக இருக்கும். இதனால், எம்எஸ் டோனி இருந்தால் எனக்கு கவலை இல்லை.

இவ்வாறு குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Next Story