Top
undefined
Begin typing your search above and press return to search.

ட்விட்டரில் விராட் கோலி சகோதரருக்கு நன்றி தெரிவித்த ரோகித் சர்மா.!

ட்விட்டரில் விராட் கோலி சகோதரருக்கு நன்றி தெரிவித்த ரோகித் சர்மா.!

Vignesh KBy : Vignesh K

  |  2 May 2020 12:49 PM GMT

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த கேப்டன் விராட் கோலிக்கு நன்றி என ட்வீட் செய்த ரோகித் சர்மா.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. இவருக்கு சென்ற ஏப்ரல் 30ஆம் தேதி பிறந்த நாள். இவருடைய பிறந்த நாளுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய வாழ்த்து தெரிவித்தார். அதில் கடவுள் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் மற்றும் மேலும், பல சிறப்பான இன்னிங்ஸ் களையும் வழங்குவார். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டார்.


இதற்கு பதிலளித்த ரோகித் சர்மா சகோதரர் விராட் கோலிக்கு மிக்க நன்றி, இன்னும் பல பார்ட்னர்ஷிப் எதிர்பார்க்கிறேன் என ட்வீட் செய்தார்.

Next Story