Top
undefined
Begin typing your search above and press return to search.

ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி அளித்த இரண்டு பவுலர்ஸ்.!

ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி அளித்த இரண்டு பவுலர்ஸ்.!

Vignesh KBy : Vignesh K

  |  4 May 2020 10:54 AM GMT

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இதனிடையே சமூக வலைத்தளம் மூலம் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவிடம் நடைபெற்ற கலந்துரையாடலில் உங்களுக்கு நெருக்கடி கொடுத்த பவுலர்ஸ் யார் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ரோகித் சர்மா கூறியது: நான் இந்திய அணியில் நுழைந்த போது ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ சிறந்த பலராக இருந்தார். 2007ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் அவர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவார். அந்த பந்தை எப்படி எதிர்கொள்வது என நினைத்தேன்.

இதனை போல் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அவருடைய பந்தை எதிர் கொள்ளக் கூடாது என நினைத்தேன். அவர் பந்தை ஸ்விங் செய்வார். இவர்கள் இரண்டு பேர்தான் என்னுடைய ஆரம்ப காலத்தில் நான் எதிர் கொள்ளக் கூடாது என நினைத்த பவுலர்கள்.

மேலும், தற்போது இருக்கும் பவுலர்களில் தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹேசில்வுட் இவர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். டெஸ்ட் போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தை எதிர்கொள்ளக் விரும்பமாட்டேன் என்றார்.

Next Story