Top
undefined
Begin typing your search above and press return to search.

டேவிட் வார்னர் தேர்வு செய்த சிறந்த வீரர்கள் கொண்ட லெவன் அணி.!

டேவிட் வார்னர் தேர்வு செய்த சிறந்த வீரர்கள் கொண்ட லெவன் அணி.!

Vignesh KBy : Vignesh K

  |  8 May 2020 6:26 AM GMT

உலகம் முழுதும் கொரோனா பரவி வருவதால் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டி தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் வீரர்கள் அதிகமாக விளையாடுவார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை வைத்து சிறந்த லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக அவரையும் ஒரு விதமாகவும் தேர்வு செய்தார்.

மூன்றாவது இடத்தில் வீராட் கோலியும், நான்காவது இடத்தில் சுரேஷ் ரெய்னாவும், ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஆறாவது இடத்தில் மேக்ஸ்வெல்லும், ஏழாவது இடத்தில் எம்.எஸ் டோனியும் மற்றும் இவரே விக்கெட் கீப்பர் ஆகவும் தேர்வு செய்துள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

Next Story