Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் போட்டி எப்போது தொடங்கப்போகிறது.? வெளியானது அறிவிப்பு !

ஐ.பி.எல் போட்டி எப்போது தொடங்கப்போகிறது.? வெளியானது அறிவிப்பு !

Vignesh KBy : Vignesh K

  |  21 May 2020 12:23 PM GMT

ஐபிஎல் போட்டியின் 13 வது சீசன் செப்டம்பர் மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஐ.பி.எல் போட்டியி மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனாவின் காரணத்தால் தற்போது வரை அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐ.பி.எல் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூபாய் 4,000 கோடி இழப்பு ஏற்படும் மற்றும் வீரர்களின் சம்பளங்கள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. நான்காவது ஊரடங்கு உத்தரவின் போது ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது 25 ஆம் தேதி உள்நாட்டு விமான சேவைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனிடையே ஐ.பி.எல் போட்டியை நடத்துவது பற்றி பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனை பற்றி ஐ.பி.எல் நிர்வாகி ஒருவர் கூறியது: ஐ.பி.எல் போட்டியை நடத்துவது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. பல விஷயத்தில் முன்னேற்றம் தேவை. அதே சமயத்தில் செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரையில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ முயற்சி செய்கிறது. மேலும், அரசின் அனுமதியை எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

மற்ற ஒரு நிர்வாகி கூறியது: பிசிசிஐ செப்டம்பர் நவம்பர் இடையில் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என கூறியது உண்மை. ஆனால் எந்த இடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படவில்லை. அடுத்தடுத்து அறிவிப்பில் இதனை பற்றி தெளிவான விவரங்கள் அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது ஆனால் இந்த போட்டி நடைபெறாது என ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூறுகின்றனர். ஒருவேளை உலக கோப்பை நடைபெறவில்லை என்றால் ஐபிஎல் போட்டி நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Next Story