Top
undefined
Begin typing your search above and press return to search.

எம்.எஸ் டோனியை பாராட்டிய இந்திய ஹாக்கி ஜாம்பவான்.!

எம்.எஸ் டோனியை பாராட்டிய இந்திய ஹாக்கி ஜாம்பவான்.!

Vignesh KBy : Vignesh K

  |  27 May 2020 1:42 PM GMT

என்னுடைய உடல் ஆரோக்கியதிற்கு உங்கள் வெற்றி காரணம் என எம்.எஸ் டோனியிடம் இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பிர் சிங் கூறியுள்ளார்.

இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் 1948, 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த முக்கியக் காரணமாக இருந்தவர். இவர் இரண்டு நாட்கள் முன்பு தான் உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்ற 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியிடம் மோதியது. இதற்கு பல்பிர் சிங் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதற்கு அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ் டோனி நன்றி தெரிவித்துள்ளார்.


இதனை பற்றி பல்பிர் சிங் கூறியது: உங்களுடைய வெற்றி தான் என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க காரணம். இந்தியா அணியை வாழ்த்துவதற்காக தான் வந்தேன். மேலும், மூன்றாவது முறையாக உலக கோப்பையை வெற்றி பெற்று 'கோல்டன்' ஹாட்ரிக் சாதனை படைக்க என்னுடைய வாழ்த்தை தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வென்று அரையிறுதி போட்டியில் மேற்கு இந்தியதீவு அணியிடம் தோற்றது.

Next Story