Top
undefined
Begin typing your search above and press return to search.

கங்குலியின் கடைசி போட்டியில் இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.எஸ் டோனி.!

கங்குலியின் கடைசி போட்டியில் இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.எஸ் டோனி.!

Vignesh KBy : Vignesh K

  |  12 July 2020 12:59 PM GMT

என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியை தலைமை தாங்கும் வாய்ப்பை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார் எம்.எஸ் டோனி என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி. இவர் தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார். இவருடைய தலைமையில் இந்தியா அணியை சிறப்பாக வழிநடத்தினார். கடந்த 2008ஆம் ஆண்டு நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான் கங்குலியின் கடைசி போட்டி. அந்த போட்டியில் இந்தியா அணிக்கு கேப்டனாக இருந்த டோனி, மிகுந்த பெருந்தன்மையுடன் இந்தியா அணியின் கேப்டன் பொறுப்பை கங்குலிக்கு வழங்கியுள்ளார்.

இதை பற்றி கங்குலி கூறியது: நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி என்னால் மறக்க முடியாது. என்னுடைய கடைசி போட்டி என்பதால், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய சமயத்தில் சக வீரர்கள் எனக்கு கவுரவப்படுத்தினர். டோனி கேப்டனாக இருந்தால் ஆச்சரியத்துக்கு பஞ்சம் கிடையாது.

அந்த போட்டியின் கடைசி நேரத்தில் என்னை கேப்டன் பொறுப்பை ஏற்கும் படி டோனி கேட்டுக்கொண்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சியில் உரைந்தேன். அப்போட்டியில் இந்தியா அணி வென்றது. ஆனால், என்னுடைய மனதில் ஓய்வை பற்றி சிந்தித்து இருந்தேன்.

இவ்வாறு சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

Next Story