Top
undefined
Begin typing your search above and press return to search.

போட்டியின் போது பந்துவீச்சாளர்களுக்கு டோனி கொடுக்கும் சிறப்பான திட்டங்கள் - யுஸ்வேந்திர சாஹல் சுவாரசிய தகவல்.!

போட்டியின் போது பந்துவீச்சாளர்களுக்கு டோனி கொடுக்கும் சிறப்பான திட்டங்கள் - யுஸ்வேந்திர சாஹல் சுவாரசிய தகவல்.!

Vignesh KBy : Vignesh K

  |  16 July 2020 11:50 AM GMT

கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் பந்துவீச்சாளர்களுக்கு எம்எஸ் டோனி கொடுக்கும் அறிவுரைகள் பற்றியும் சிறப்பான திட்டத்தைப் பற்றியும் அவருடன் ஏற்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் பற்றியும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடவர் என ரசிகர்கள் எதிர்பார்த்த சமயத்தில் கொரோனா வைரஸ் காரணத்தால் அனைத்துக் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் எம்எஸ் டோனியுடன் ஏற்பட்ட நிகழ்வுகளை பல கிரிக்கெட் வீரர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது யுஸ்வேந்திர சாஹல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் எம்எஸ் டோனி பற்றி சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியது: இந்திய அணியின் மிக சிறப்பான வீரர் எம்எஸ் டோனி போட்டி நடைபெற்று இருக்கும் சமயத்தில் எனக்கும் குல்தீப் யாதவ்வுக்கும் எம்எஸ் டோனி நிறைய அறிவுரைகளை கொடுத்துள்ளார். சில சமயத்தில் எங்களுடைய பந்துகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பார்கள் அந்த சமயத்தில் எம்எஸ் டோனி என்னிடம் வந்து என்னுடைய தோள் மீது கை வைத்து பந்தை கூக்லி முறையில் பந்தை வீச சொல்வார் நான் அவர் சொன்னபடி பந்துவீசும் சமயத்தில் விக்கெட் விழுந்து விடும் என்றார்.


அவர் கொடுக்கும் அறிவுரைகள் பலமுறை ஒர்க் அவுட் ஆகி உள்ளது. தென்னாபிரிக்காவுடனான போட்டியில் டுமினி பேட்டிங் செய்த சமயத்தில் நான் அவருடைய விக்கெட்டை எடுக்க வேண்டும் என நினைத்து பந்துகளை வீசி கொண்டிருந்தபோது நான் சோர்வடைந்தேன். அப்போது டோனி என்னிடம் வந்து ஸ்டம்புக்கு நேராக பந்து வீசு என தெரிவித்தார். நானும் அதே சமயத்தில் பந்தை வீசிய போது எல்.பி.ட பிள்யூ ஆனது. நான் உடனே டோனியை கட்டிப்பிடித்து கொண்டேன்.

இவ்வாறு யுஸ்வேந்திர சாஹல் பேசினார்.

Next Story