Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் போட்டியை நடத்துவது பற்றி இன்று பி.சி.சி.ஐ முடிவு.!

ஐ.பி.எல் போட்டியை நடத்துவது பற்றி இன்று பி.சி.சி.ஐ முடிவு.!

Vignesh KBy : Vignesh K

  |  17 July 2020 12:55 PM GMT

பி.சி.சி.ஐ நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று காணொலி மூலம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டியை நடத்துவது பற்றி பேசியுள்ளது.

இதனை பற்றி பி.சி.சி.ஐ நிர்வாகி ஒருவர் கூறியது: கொரோனா வைரஸ் காரணத்தினால் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, துலீப் டிராபி உள்பட பல போட்டிகள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை பற்றி தான் கூட்டத்தில் பேச உள்ளோம்.


2021ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பை போட்டியை நடத்த மத்திய அரசு வருமான வரி விதி விலக்கு கொடுக்க அறிவுறுத்தப்படும். பின்னர் ரத்தான ஜிம்பாப்வே, இலங்கை, இங்கிலாந்து போட்டிகளின் புதிய அட்டவணையை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மிக முக்கியமாக ஐ.பி.எல் போட்டியை நடத்துவது பற்றி பேசப்படும்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டியை ரத்து செய்வதை பற்றி ஐ.சி.சி அதிகாரபுரவ அறிவிப்பை வெளியிட்டால், அக்டோபர்-நவம்பர் மாதம் ஐ.பி.எல் போட்டியை நடத்தலாம். ஐ.பி.எல் போட்டியை இந்தியாவில் நடத்த முன்னுரிமை கொடுக்கப்படும். இதன் பிறகு முக்கிய பிரச்னைகள் பற்றி பி.சி.சி.ஐ நிர்வாகிகள் பேச உள்ளனர்.

Next Story