Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐசிசி-யின் சேர்மனாக கங்குலி வந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மாற்றம் ஏற்படும் - இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா.!

ஐசிசி-யின் சேர்மனாக கங்குலி வந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மாற்றம் ஏற்படும் - இலங்கையின்  முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா.!

Vignesh KBy : Vignesh K

  |  27 July 2020 12:09 PM GMT

கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் நலனுக்காக ஐசிசி சேர்மன் பாதிக்கு கங்குலி தான் வரவேண்டும். அவர் தான் அதற்கு பொருத்தமானவர் என முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

தற்போது ஐசிசி சேர்மனாக இந்தியாவின் சஷாங்க் மனோகர் இருந்துள்ளார். இவருடைய பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் புதிய சேர்மனை தேர்ந்து எடுக்கவேண்டும். இதற்கு பலரும் போட்டியில் உள்ளனர்.

இதனை பற்றி இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா கூறியது: சர்வதேச கிரிக்கெட்டில் சௌரவ் கங்குலியால் தான் புதிய மாற்றம் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன். நான் அவருடைய தீவிரமான ரசிகர். ஆனால், அதற்காக நான் இதனை சொல்லவில்லை. அவர் சிறப்பான கிரிக்கெட் வீரராக இருந்தவர். கிரிக்கெட் பற்றி பல விஷயங்களை தெரிந்தவர். கிரிக்கெட் மீது அதிக அக்கறை வைத்துள்ளவர்.

ஐ.சி.சியில் இருக்கும் பொழுது பிசிசிஐ, இங்கிலாந்து, இலங்கை ஆகிய எந்த ஒரு கிரிக்கெட் போர்டுக்கும் உங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது. உங்களுடைய மனநிலை பொதுவாக இருக்க வேண்டும். எங்கிருந்து வந்தோம் என்பதை நினைத்து பாகுபாடு காட்டக் கூடாது. நான் கிரிக்கெட் வீரர் என்னுடைய செயல்கள் அனைத்தும் கிரிக்கெட்டுக்காக இருக்க வேண்டும் என்பதை நினைத்திருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் சௌரவ் கங்குலி தான் பொருத்தமானவர் என நம்புகிறேன். அவர் சக வீரர்களுடன் சிறந்த நட்பை வைத்திருக்கிறார். அவர் தான் ஐசிசி சேர்மன் பதவிக்கு சிறந்தவர். எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இவ்வாறு குமார் சங்ககாரா கூறினார்.

Next Story