Top
undefined
Begin typing your search above and press return to search.

எம்.எஸ் டோனி பிட்டாக இருக்கும் வரை இந்தியா அணியில் விளையாடுவேன் என தெரிவித்தார் - சஞ்சய் மஞ்ச்ரேகர் தகவல்.!

எம்.எஸ் டோனி பிட்டாக இருக்கும் வரை இந்தியா அணியில் விளையாடுவேன் என தெரிவித்தார் - சஞ்சய் மஞ்ச்ரேகர் தகவல்.!

Vignesh KBy : Vignesh K

  |  9 Aug 2020 11:17 AM GMT

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி. இவர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவார இல்லை ஓய்வு பெறுவாரா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.இதற்கு காரணம் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்கு பின்பு எந்த ஒரு சர்வதேச போட்டிகளில் எம்.எஸ் டோனி விளையாடவில்லை. இதை பற்றி ஆர்வலர்களும் விவாதித்து வருகின்றனர்.

தற்போது செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதனால் எம்.எஸ் டோனி பயிற்சியை தொடங்கி உள்ளார். இந்த தொடரில் டோனி அதிரடியாக விளையாடினால் மீண்டும் இந்தியா அணியில் விளையாடுவர் என கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர். டோனியை பற்றி ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் திருமணத்தில் டோனி என்னிடம், சிறந்த உடல் தகுதி மற்றும் என்னால் வேகமாக ஓடும் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என தெரிவித்தார்.

இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.

Next Story