Top
undefined
Begin typing your search above and press return to search.

ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர்களை டிசம்பர் மாதத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்.!

ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர்களை டிசம்பர் மாதத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Aug 2020 4:38 AM GMT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் வழக்கமாக நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் கொரோனா பெரும்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று பி.சி.சி.ஐ. அறிவிப்பின் படி ரஞ்சிகோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல். தொடர் இரு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று இந்தியாவில் பெரும் அளவில் பரவியுள்ளதால் இந்தியாவிற்கு பதில் ஐக்கிய அரபு எமிரகத்தில்(UAE) நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து இந்திய இளம் வீரர்கள் கிரிக்கெட் தொடர்களை பங்கேற்கும் விதமாக இந்தாண்டு இறுதியில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்த பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளது.

நவம்பர் மாதம் 19ம் முதல் அடுத்தாண்டு மார்ச் 10ம் தேதி வரை சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உள்நாட்டு தொடர்களில் பிரபலமான தொடரான ரஞ்சிகோப்பை தொடர் டிசம்பர் மாதம் 13ம் தேதி தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த தொடர்கள் ரசிகர் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சிகோப்பை தொடர் ஐந்து குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஐய் ஹஷாரே டிராபி இந்தாண்டு நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 50ஓவர்கள் கொண்ட சேலஞ்சர்ஸ் டிராபி தொடர்களும் துலிப் டிராபி தொடர்களும் கைவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணி கோப்பை தொடர் நடைபெறுமா என்ற எதிரபார்ப்பு ரசிகர் இடையே அதிகரித்துள்ளது.

Next Story