Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். தொடரிற்கு முன்பாக சென்னை சேப்பாக்கத்தில் களம் இறங்கும் தல தோனி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

ஐ.பி.எல். தொடரிற்கு முன்பாக சென்னை சேப்பாக்கத்தில் களம் இறங்கும் தல தோனி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Aug 2020 5:15 AM GMT

இந்தியாவின் பிரமாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் 2020 மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக முதலில் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பட்டது. பின்னர் மீண்டும் கொரோனா தொற்று காரணமாக தேதி குறிபிடாமல் ஒத்திவைப்பட்ட நிலையில் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10 தேதி வரை 13வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.

அதன் படி ஐபிஎல் அணிகள் ஐபிஎல் தொடருகாக தயாராகி வருகின்றனர். இந்த முறை ஐபிஎல் தொடர் ரசிகர் இல்லாமல் நடைபெற உள்ளதால் போட்டிகள் கடும் கட்டுபாடுகளேடு நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருகாக அனைத்து அணிகளும் தங்களின் வீரர்கள் தயாராகி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட்-15ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள MA சிதம்பரம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் ரசிகர் உற்சாகத்தில் உள்ளனர்.

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரய்னா மற்றும் ஹர்பஜன் சிங், முரளி விஜய் ஆகியோர் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். ஐபிஎல் தொடர்ருக்கு முன்பாக சென்னையில் தோனி களம் இறங்க உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story