Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் இந்த ஐ.பி.எல். தொடரை வெல்லும் என உறுதியளிக்கும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரட் லீ.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் இந்த ஐ.பி.எல். தொடரை வெல்லும் என உறுதியளிக்கும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரட் லீ.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Aug 2020 7:00 AM GMT

ஐபிஎல் டி - 20 13வது சீசன் கிரிக்கெட் தொடர் கொரோன தொற்றுநோய் பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்து ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது . இந்த முறை ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் கூறப்படுகிறது . ஐபிஎல் நிர்வாகம் போட்டிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த திட்டமிட்டுள்ளது .

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது . இதற்காக ஐபிஎல் அணிகள் தங்களை தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்லும் என கூறியுள்ளார் . இது குறித்து அவர் கூறுகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அனுபவ வாய்ந்த வீரர்கள் உள்ளனர் .

சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி இருப்பதாகவும் கூறியுள்ளார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமா இருக்கும் என்பதால் சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர் என்றும் கூறினார் . சென்னை அணியில் முத்த வீரர்கள் தோனி , சுரேஷ் ரெய்னா , ஜடேஜா , பிராவோ , ஹர்பஜன் சிங் , வாட்சன் , இம்ரான் தாஹிர் , டூப் ப்ளஸிஸ் ஆகியோர் உள்ளனர் . இதன் காரணமாக இந்த முறை ஐக்கிய அரபு எமிரேக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என கூறியுள்ளார் .

Next Story