Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த இந்திய அரசு அனுமதி.!

ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த இந்திய அரசு அனுமதி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Aug 2020 1:15 PM GMT

இந்தியன் பிரிமியர் லீக்( ஐபிஎல்) தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெற இருந்த நிலையில் உலகளவில் கொரோனா தொற்றுநோய் பரவியதால் ஏப்ரல் 15 ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்ததால் தேதி குறிபிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் டி-20 உலககோப்பை தொடர் இந்தாண்டு நடைபெற இருந்த நிலையில் அதுவும் கொரோனா பெறும் தொற்றால் பாதிப்படைந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

அதன் படி இந்தியாவில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஐபிஎல் 13வது சீசன் செப்டம்பர் 19ம் முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில் இருந்த ஐக்கிய அரபு அமிரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த இந்திய அரசின் அனுமதி பெற்றால் தான் நடத்த முடியும் என்பதால் ஐபிஎல் நிர்வாகம் காத்திருந்த நிலையில் இந்தியா அரசு இன்று ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

Next Story