Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்.!

இந்த ஐபிஎல் தொடரில்  வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Aug 2020 9:45 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக இந்தாண்டு ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா பெறும் தொற்று வேகமாக பரவியதால் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் இருந்த நிலையில் இந்திய அரசின் அனுமதியுடன் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன் படி செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை எனவும் ஐபிஎல் தொடர் முழுக்க கடும் கட்டுபாடுகளுடன் நடைபெறும் எனவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணி வீரர்களை தனிமைபடுத்தி பின்னர் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு செல்லும் என கருதப்படுகின்றது. இந்த நிலையில் வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகின்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர் எபிடி வில்லியர்ஸ் தென் ஆப்ரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் நாட்டைவிட்டு வெளியேற அனுமதி கிடைக்காது என கூறப்படுகின்றது. அதே போன்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் கரிசோ ராபாடா பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகின்றது.

ஐபிஎல் தொடர் நடைபெறும் அக்டோபர் மாதம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஒரு நாள் போட்டி தொடர் நடைபெறுவதால் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் மற்றும் கம்மிங்ஸ் , மேக்ஸ்வெல் ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சிக்கல் எற்படுள்ளது. இதே போன்று இங்கிலாந்து அணியிலஅணியில் பென் ஸ்டோக்ஸ், மோர்கன், பட்லர், ஆர்ச்சர் ஆகியோர் பங்கேற்பது கடினம் என கூறப்படுகின்றது.

Next Story