Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐக்கிய அரபு அமிரகத்தில் விளையாடுவது சென்னை அணிக்கு உதவும் - ஷேன் வாட்சன்.!

ஐக்கிய அரபு அமிரகத்தில்  விளையாடுவது சென்னை அணிக்கு உதவும் - ஷேன் வாட்சன்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  12 Aug 2020 4:15 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19- நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் போட்டிகள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: கோவிட்-19 இடைவேளைகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராவது எவ்வளவு கடினம்?

கோவிட்-19 அனைத்து உயிர்களையும் பாதித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஐபிஎல் போன்ற உயர்மட்ட போட்டிகளில் விளையாடுவது அதிஷ்டம். இது நிச்சயம் சவாலாக தான் இருக்கும் ஆனால் ஐபிஎல் தொடர்களில் பல ஆண்டுகள் விளையாடி உள்ளதால் அந்த அனுபவம் எனது திறமைகளை மீட்டெடுபதற்கு உதவும் என கூறினார்.

இந்த சீசனுக்கு முன்னதாக சிஎஸ்கேவின் வாய்ப்புகளை எவ்வாறு மதிப்பிடுகிறிர்கள்?

சிஎஸ்கேவின் வாய்ப்புகள் மற்ற அணிகளை போலவே சிறந்தது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் சில உற்சாகமான இளம் வீரர்களை கொண்டது. இது தான் அந்த அணியின் ப்ளஸ் மற்றும் தோனி மற்றும் ப்ளாமிங்கின் தலைமையில் சிறப்பாக செயல்படும்.

கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டி உங்களின் இதயத்தை உடைக்கும் விளையாட்டுகளில் ஒன்றா?

கடந்த ஆண்டு மும்பை இன்டியன்ஸ் எதிரான இறுதிப்போட்டியில் நாங்கள் செய்தது போல போட்டியை வெல்லுவதற்கு சிறந்த முயற்சிகளை மேற்கொண்டோம். நாங்கள் அந்த நெருக்கமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றது எங்களின் முயற்சி. இந்தாண்டு புதிதாக தொடங்குவோம்.

யுஏஇ-யில் விக்கெட்கள் விரைவாக இல்லததால் இது சிஎஸ்கேவிற்கு பொருந்தும் என்று நினைக்கிறீர்களா?

அது நிச்சயமாக இருக்கும். விக்கெட்கள் மெதுவாக உள்ளதால் எங்களின் உயர்தர சுழல்பந்து வீச்சளார்கள் உள்ளனர். நாங்கள் மூலதனமாக இருப்போம். வெற்று மைதானத்தில் விளையாடுவது புதிதாக இருக்கும் சென்னை ரசிகர்களின் உற்சாகத்தை நாங்கள் இழப்போம்.

Next Story