Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபில் போட்டி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பில்டிங் பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு.!

ஐபில் போட்டி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பில்டிங் பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு.!

Vignesh KBy : Vignesh K

  |  12 Aug 2020 8:30 AM GMT

இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளது.



தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பில்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்கு கொரோனா வைரஸ் இருபத்து உறுதியாகியுள்ளது. இந்த தகவலை ராஜஸ்தான் ராயல் அணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட திஷாந்த் யாக்னிக்யை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்பு அவருக்கு 14 நாட்கள் பின் இரண்டு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இந்த இரண்டு கொரோனா பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இல்லை என உறுதியான பின்பு அவரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பமுடியும்.

மேலும், அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மூன்றாவது முறை கொரோனா பரிசோதனை தொற்று இல்லை என உறுதியான பின்பு தான் திஷாந்தை பயிற்சியில் பங்கேற்க முடியும்.

Next Story