Top
undefined
Begin typing your search above and press return to search.

மீண்டும் சர்வதேச போட்டிகளில் களம் இறங்கும் வங்கதேச அணியின் ஆல் - ரவுண்டர் ஷஹிப் - அல் - ஹசன்.!

மீண்டும் சர்வதேச போட்டிகளில் களம் இறங்கும் வங்கதேச அணியின் ஆல் - ரவுண்டர்  ஷஹிப் - அல் - ஹசன்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  12 Aug 2020 10:15 AM GMT

வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷஹிப்-அல்-ஹசன் ஒரு ஆண்டு தடைக்கு பிறகு மீண்டும் அணியில் இணைய உள்ளார் என்ற தகவல் பரவி வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் பாதிப்படைந்துள்ளன. இந்த இக்கட்டன சூழ்நிலையில் தற்பொழுது கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் வங்கதேச அணி இந்தாண்டு இறுதியில் இலங்கை அணிக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் மார்ச் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 டி-20 போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் தற்பொழுது குறைக்கப்பட்டு மூன்று டி-20 போட்டிகள் மட்டும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மீண்டும் ஷஹிப்-அல்-ஹசன் அணியில் இடம்பிடிப்பார் என கூறப்படுகின்றது.

ஐசிசி விதிகளை மீறி மூன்று முறை ஊழல் அணுகுமுறைகளை ஐசிசியிடம் புகாரளிக்க தவறியததால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு வங்கதேசம், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடிய முத்தரப்பு தொடரில் இரண்டு முறையும், 2018 ஐபிஎல் தொடரில் ஒரு முறையும் நடைபெற்றுள்ளது. தற்பொழுது அக்டோபர் 29ம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறும் நிலையில் மீண்டும் அணியில் இணைவார் என கூறப்படுகின்றது.

Next Story