Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை பயிற்சியில் ரவிந்திர ஜடேஜா பங்கேற்கமாட்டார் - சென்னை அணி நிர்வாகம் தகவல்-!

சென்னை பயிற்சியில் ரவிந்திர ஜடேஜா பங்கேற்கமாட்டார் - சென்னை அணி நிர்வாகம் தகவல்-!

Pravin KumarBy : Pravin Kumar

  |  13 Aug 2020 2:30 AM GMT

ஐபிஎல் 2020- 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த இந்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி பெற்றுள்ள நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களின் அணிகளை தயார் செய்து வருகின்றனர். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மூன்று மைதானங்களில் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பெறுத்து வரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடத்த உள்ளனர். பின்னர் ஆகஸ்ட் 21ம் தேதி இந்திய வீரர்கள் மட்டும் துபாய் பயணம் செய்வார்கள் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சென்னை அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஐந்து நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் பயிற்சியில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

சென்னை அணியின் வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், மைக் ஹஷி, ஆகியோர் ஆகஸ்ட் 22ம் தேதி இணைவார்கள் என கூறப்படுகின்றது.

Next Story