Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜேம்ஸ் ஆன்டர்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என ஜோ ரூட் நம்பிக்கை.!

ஜேம்ஸ் ஆன்டர்சன்  தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என ஜோ ரூட் நம்பிக்கை.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  13 Aug 2020 3:30 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்.

ஜோ ரூட்டிடம் இந்த போட்டியில் ஜேம்ஸ் ஆன்டர்சன் விளையாடுவார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜோ ரூட் ஆம் என பதில் அளித்தார். தற்பொழுது நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு விக்கெட்களை மட்டுமே ஆன்டர்சன் வீழ்த்தி உள்ளதால் கடந்த வாரம் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற சர்ச்சை கிளம்பியது.

ஜோ ரூட் மேலும் கூறுகையில் ஜேம்ஸ் ஆன்டர்சன் அனுபவம் வந்த வீரர் அவரை நான் ஆதரிப்பதாக கூறினார். ஆன்டர்சன் 600 விக்கெட்களை வீழ்த்திய வேகபந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார் என கூறினார். ஆன்டர்சன் மீண்டு வருவார் என நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

Next Story