Top
undefined
Begin typing your search above and press return to search.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தடுமாற்றும் பாகிஸ்தான் அணி மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு.!

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தடுமாற்றும் பாகிஸ்தான் அணி மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Aug 2020 3:00 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியை பெறுத்த வரையில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் உள்ளது. முதலில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஷான் மாசூட் மற்றும் ஆஷிட் அலி இருவரும் களம் இறங்கினர். முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய மாசூட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்து கேப்டன் ஆஷார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஆஷிட் மற்றும் ஆஷார் இருவரும் சேர்ந்து 50 ரன்கள் கடந்த நிலையில் ஆஷார் அலி 20 ரன்னில் ஆன்டர்சன் பந்தில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் வந்த பாபர் ஆஷாம் நிலைத்து விளையாட ஆஷிட் அலி அரைசதம விளாசிய நிலையில் 60 ரன்னில் சாம் குரான் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிடு இருந்த நிலையில் அதன் பின்னர் களம் இறங்கிய ஷாபிக் மற்றும் ஆலம் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தனர். மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் அணி 126-5 என்ற நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆன்டர்சன் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

Next Story