Top
undefined
Begin typing your search above and press return to search.

தோனிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பறிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.!

தோனிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பறிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Aug 2020 3:15 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரக்த்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் இந்தியாவிற்கு பதில் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மற்றப்பட்ட நிலையில் அனைத்து அணிகளும் தங்களின் அணியை தயார்படுத்தி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை அணி துபாய் செல்கின்றது. அதற்கு முன்னதாக சென்னையில் வரும் 16ம் தேதி முதல் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ள நிலையில் சென்னை அணி வீரர்கள் சென்னை வர உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து சென்னை வருவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பறிசோதனையில் நேகட்டிவ் என தகவல் வெளியாகி உள்ளது. எனவே சென்னை அணியின் கேப்டன் தோனி இன்று சென்னைக்கு வருவது உறுதியாகி உள்ளது. தோனியை தொடர்ந்து ரெய்னா, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், கேதர் ஜாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Next Story