Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை அணி வீரர்களின் குடும்பங்கள் துபாய் செல்ல செக் வைத்தது சென்னை அணி நிர்வாகம்.!

சென்னை அணி வீரர்களின் குடும்பங்கள் துபாய் செல்ல செக் வைத்தது சென்னை அணி நிர்வாகம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Aug 2020 5:00 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரக்த்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் இந்தியாவிற்கு பதில் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மற்றப்பட்ட நிலையில் அனைத்து அணிகளும் தங்களின் அணியை தயார்படுத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமிரகத்தில் செப்டம்பர் 19- நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இந்த முறை பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என கூறப்படுகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை அணி துபாய் செல்கின்றது. அதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் மட்டும் சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் சென்னை அணியை பெறுத்த வரை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் சப்போஸ்டர்ஸ் உடன் எப்பொழுதும் காணப்படும். ஆனால் இந்த முறை கொரோனா தொற்று உள்ளதால் சென்னை அணி வீரர்களின் குடும்பங்கள் பங்கேற்க அனுமதி இல்லை என சென்னை அணி நீர்வாகம் கூறியுள்ளது.

பொதுவாக தோனி , சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்களின் குடும்பங்கள் போட்டிகளை காண மைதானங்களுக்கு வருவது வழக்கம் ஆனால் இம்முறை பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகின்றது. சென்னை அணியின் வீரர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர்.

Next Story