Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சுற்றுபயணம் உறுதியாகியுள்ளது.!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சுற்றுபயணம் உறுதியாகியுள்ளது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Aug 2020 7:09 AM GMT

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையான டி-20 மற்றும் ஓடிஐ தொடர்கள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியா அணி கொரோனா இடைவேளிக்கு பிறகு தற்பொழுது இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. செப்டம்பர் 4ம் தேதி முதல் டி-20 போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுமா என சந்தேகம் நிலவி வந்த நிலையில் இந்த தொடர் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் மூன்று டி—20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 4- 1 டி-20

செப்டம்பர் 6- 2 டி-20

செப்டம்பர் 8- 3 டி-20

செப்டம்பர் 11- 1 ஓடிஐ

செப்டம்பர் 13- 2 ஓடிஐ

செப்டம்பர் 16- 3 ஓடிஐ

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் 21 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் பின்ச் தலைமையில் ஆஸ்திரேலியா அணி களம் இறங்குகிறது.

ஆரோன் பிஞ்ச் (இ), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (வி.சி), ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ரிலே மெரிடித், ஜோஷ் பிலிப், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை, மத்தேயு வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

Next Story