Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை வந்தடைந்த தோனி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள்.!

சென்னை வந்தடைந்த தோனி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  15 Aug 2020 4:00 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்க நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19- நவம்பர் 10 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் அணி வீரர்களை தயார்படுத்தி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரையில் ஐபிஎல் தொடர்க்கு ஐக்கிய அரபு அமிரகத்திற்கு முன்பாக சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கும் என எற்கனவே சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன் படி சென்னையில் பயிற்சிகாக சென்னை அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி , துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, தீபக் சஹார், கரன் சர்மா, பிவுஸ் சாவ்லா, அம்பத்தி ராய்டு, முனு சிங், கேதார் ஜாதவ் ஆகிய இந்திய வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். ஆல் ரவுண்டர் ஐடேஜா, ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்கள் பயிற்சியில் பங்கேற்கவில்லை என கூறப்படுகின்றது.

Next Story