Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்த திட்டம்.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்த திட்டம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  15 Aug 2020 8:15 AM GMT

இந்தியா அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்திற்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து அணி கொரோனா இடைவேளிக்கு பிறகு மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றது.

தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகின்றது. இந்த தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் இந்தியாவில் நடக்க வேண்டிய ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் இலங்கையில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. .

Next Story