Top
undefined
Begin typing your search above and press return to search.

மகேந்திர சிங் தோனியின் முடியடிக்க முடியாத சாதனைகள் - ஓர் பார்வை.!

மகேந்திர சிங் தோனியின் முடியடிக்க முடியாத சாதனைகள் - ஓர் பார்வை.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  16 Aug 2020 4:30 AM GMT

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்தியாவின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி தனது 16 வருட சர்வதேச கிரிக்கெடிற்கு ஓர் முற்றுபுள்ளி வைத்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்த தோனி தீடிர் என தனது ஓய்வை நேற்று இரவு அறித்தார். இந்தியாவின் 74வது சுதந்திர தினம் நேற்று கொண்டப்பட்ட நிலையில் தோனியின் ஓய்வு முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

தோனி தீடிர் என தனது ஓய்வு முடிவை அறிவிக்க காரணம் தெரியாத நிலையில் ஆகஸ்ட் 14ம் சென்னை வந்தடைந்த தோனி நேற்று பயிற்சி ஈடுபட்டார். இந்த நிலையில் இரவு தனது இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை பதிவிட்ட தோனி தனது ஆரம்ப கால கிரிக்கெட் புகைப்படங்களை பதிவிட்டு மிகவும் எளிமையாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தோனி 2004ம் ஆண்டு முதன் முதலில் வங்கதேச அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெடில் களம் இறங்கினார். தனது முதல் போட்டியிலேயே ரன் எடுக்காமல் ரன்அவுட் ஆகினார். பின்னர் அவர் படைத்த சாதனைகள் பல உள்ளன. 2007ஆம் ஆண்டு டி-20 உலககோப்பைக்கு இந்திய அணிக்கு கேப்டனாக களம் இறங்கினார். 2007ம் ஆண்டு இந்திய அணிக்கு டி-20 உலககோப்பையை பெற்று தந்தார். அதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பையையும் இந்திய அணிக்கு பெற்றது தந்தார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இந்திய அணிக்கு பெற்று தந்ததன் மூலமாக மூன்று விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஓரே கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனை இன்னும் யாரலும் படைக்க முடியவில்லை.

தோனி விக்கெட் கிப்பிங்லும் பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 195 ஸ்டம்பிங் இதுவரை செய்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் இலங்கை அணியின் சங்ககாரா 139 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Next Story