Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  18 Aug 2020 3:15 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியில் முதல் நாளில் 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் பாகிஸ்தான் 126-5 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி 229-9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது நாளும் மழை குறுக்கிட்டது. அதை தொடர்ந்து மூன்றாம் நாள் முழுமையாக மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நான்காம் நாள் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 10 ஓவர்கள் மட்டுமே மூன்றாம் நாள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்த நிலையில் ஆட்டம் டிராவை நோக்கி சென்ற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 110-4 என்ற நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்கள் முழுமையாக சேர்த்து 134.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story