Top
undefined
Begin typing your search above and press return to search.

நாளை சென்னை அணியுடன் ஹர்பஜன் சிங் துபாய் செல்லமாட்டார் என தகவல் - விபரம் உள்ளே.!

நாளை சென்னை அணியுடன் ஹர்பஜன் சிங் துபாய் செல்லமாட்டார் என தகவல் - விபரம் உள்ளே.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  20 Aug 2020 7:45 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் இந்தாண்டு ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 19ம் தேதியிலிருந்து நவம்பர் 10ம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துவிட்டது. இந்தாண்டிற்காக ஐபிஎல் டைடில் ஸ்பான்சர்ஷிப் டிரீம் 11 நிர்வனம் பெற்றுள்ளது. இதற்கு இடையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் தொடருக்காக தயார் ஆகி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஏற்கனவே ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அணி ஆகஸ்ட் 21ம் தேதி துபாய் செல்ல உள்ள நிலையில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஐடேஜா மற்றும் ஹர்பஜன் சிங் இருவர் மட்டும் இன்னும் சென்னை வராமல் உள்ள நிலையில் ஹர்பஜன் சிங் சென்னை அணியுடன் துபாய் செல்லவில்லை என கூறப்படுகின்றது. ஹர்பஜன் சிங் தாயார் உடல்நிலை காரணமாக இரண்டு வாரங்கள் பிறகு சென்னை அணியில் இணைவார் என கூறப்படுகின்றது.

ரவிந்திர ஜடேஜா சென்னை அணியில் இன்று அல்லது நாளை இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னை அணி துபாய் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு பின்னர் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகின்றது.

Next Story