Top
undefined
Begin typing your search above and press return to search.

சுனில் நரைனின் அதிரடி ஆட்டத்தால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணி.!

சுனில் நரைனின் அதிரடி ஆட்டத்தால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  21 Aug 2020 3:30 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த லீக் தொடரில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் நட்சத்திர அதிரடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். லீக் தொடரின் 6வது போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டியில் பெலார்ட் தலைமையிலான டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணியும் ரோமன் பவல் தலைமையிலான ஜமைகா தல்லாவாஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய ஜமைகா அணியில் தொடக்க வீரர்கள் சாட்விக் வால்டன் மற்றும் ப்லிப்ஸ் இருவரும் களம் இறங்கினர். வால்டன் 0 ரன்னில் வெளியேற பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் கிர்த்தனும் டக் அவுட் ஆக ப்லிப்ஸ் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அரைசத்தை கடந்த ப்லிப்ஸ் 58 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஆஷிப் அலி 22 ரன்களும் ரஸல் 25 ரன்களும் அடிக்க ஜமைக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 135-8 ரன்களை எடுத்தது.

பின்னர் விளையாடிய டிரினிடாட் அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் மற்றும் சிம்மன்ஸ் இருவரும் களம் இறங்கினர். சிம்மன்ஸ் டக் அவுட் ஆக பின்னர் வந்த கோலின் முன்ரோ சுனில் நரைன் இருவரும் இணைந்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக வீளாசினார். அரைசதம் வீளாசிய சுனில் நரைன் 53 ரன்களில் அவுட் ஆக முன்ரோ 49 ரன்கள் அடித்த நிலையில் டிரினிடாட் அணி வெற்றி இலக்கை அடைந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story