Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்றாவது டெஸ்ட் போட்டி: ஜாக் க்ராலின் சதம் மற்றும் பட்லரின் அரைசதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி.!

மூன்றாவது டெஸ்ட் போட்டி: ஜாக் க்ராலின் சதம் மற்றும் பட்லரின் அரைசதத்தால்  வலுவான நிலையில் இங்கிலாந்து அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  22 Aug 2020 3:00 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சவுதாம்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்லே இருவரும் களம் இறங்கினர். ரோரி பர்ன்ஸ் 6 ரன்னில் ஷாஹீன் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஜாக் க்ராலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிப்லே 22 ரன்னில் யாசிர் ஷா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஜோ ரூட் 29 ரன்னில் நஷிம் ஷா பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ஓலி போப் 3 ரன்னில் யாசிர் ஷா பந்தில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் ஜாக் க்ராலி உடன் இணைந்த ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி தொய்வில் இருந்து மீண்டது. சிறப்பாக விளையாடிய ஜாக் க்ராலி சதம் வீளாசினார். அதை தொடர்ந்து அதிரடி காட்ட ஆரம்பித்த பட்லர் அரைசதம் வீளாசினார். இருவரின் ஆட்டத்தை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 332-4 ரன்கள் குவித்தது. ஜாக் க்ராலி 171 ரன்களுடனும் , பட்லர் 87ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Next Story