Top
undefined
Begin typing your search above and press return to search.

காரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து ஹாட் - ரீக் வெற்றி பெற்று வரும் ட்ரினிடாட் நைட் ரைடர்ஸ் அணி.!

காரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து ஹாட் - ரீக் வெற்றி பெற்று வரும் ட்ரினிடாட் நைட் ரைடர்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  24 Aug 2020 3:15 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. லீக் தொடரின் 9வது போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெல்லார்ட் தலைமையிலான டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணியும் ஹோல்டர் தலைமையிலான பார்பாடாஸ் ட்ரென்டாஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பார்பாடாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சனில் நரைன் மற்றும் சிம்மன்ஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சுனில் நரைன் 8 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கோலின் முன்ரோ அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் சிம்மன்ஸ் 21 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய டேரன் ப்ராவோ சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த கோலின் முன்ரோ அரைசதம் வீளாசினார். முன்ரோ 50 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கேப்டன் பெல்லார்ட் ப்ராவோவுடன் இணைந்து வெளுத்து வாங்கினார். இருவரும் சிக்ஸ்ர் மழை பொழிந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் டிரினிடாட் அணி 185-3 ரன்கள் சேர்த்தது. ப்ராவோ 54 ரன்கள் அடித்தார்.

அதன் பின்னர் களம் இறங்கிய பார்பாடாஸ் அணியின் தொடக்க வீரர்கள் சார்லாஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் சிறப்பான தொடக்கத்தை எற்படுத்தினர். அதிரடியாக விளையாடிய சார்லாஸ் 52 ரன்கள் குவித்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேரி ஆன்டர்சன் மற்றும் மைக் மேயர் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த ஆட்டம் இறுதி கட்டத்தை நோக்கி சென்றது. கடைசி ஓவரில் சொதப்பிய பார்பாடாஸ் அணியால் 19 ரன்கள் வித்தியாசத்தில் டிரினிடாட் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கோலின் முன்ரோ தேர்வு செய்யப்பட்டார்.

Next Story