Top
undefined
Begin typing your search above and press return to search.

ரோஸ்டன் சேஸின் அதிரடி ஆட்டத்தால் தொடர் வெற்றியை குவிக்கும் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி.!

ரோஸ்டன் சேஸின் அதிரடி ஆட்டத்தால் தொடர் வெற்றியை குவிக்கும் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  24 Aug 2020 4:15 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. லீக் தொடரின் 10வது போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரிஸ் கிரின் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் டெரன் சாமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய செயின்ட் லூசியா அணியில் தொடக்க வீரர்கள் ஆன்ட்ரே ப்லெட்சர் மற்றும் மொலிஸ் இருவரும் களம் இறங்கினர். மொலிஸ் 8 ரன்னிலும் அடுத்த வந்த மார்க் டெயல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதன் பின்னர் களம் இறங்கிய சேஸ் நிலைத்து விளையாட ப்லெட்சர் 12 ரன்னில் அவுட் ஆகினார் அதன் பின்னர் களம் இறங்கியவர்களில் முகமது நபி மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில் சேஸ் அரைசதம் வீளாசினார். 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி 144-7 ரன்களை சேர்த்தது.

அதை தொடர்ந்து விளையாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். பிராண்டன் கிங் 1 ரன்னிலும் ஹேட்மயர் 4 ரன்னிலும் டெய்லர் 1 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த மற்ற வீரர்கள் சொதப்பினர். 20 ஓவர்கள் முடிவில் 134-8 என்ற நிலையில் அமேசான் அணி தோல்வியை தழுவியது. செயின்ட் லூசியா அணி 10 ரன்கள் வித்தியாசதீதிலீ வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சேஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story