Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய பவுலிங் பயிற்சியாளரை அறிவித்தது அணி நீர்வாகம்.!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய பவுலிங் பயிற்சியாளரை அறிவித்தது அணி நீர்வாகம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  25 Aug 2020 10:15 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் கடும் கட்டுபாடுகளுடன் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் என மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவாகவே இருப்பதால் இன்னும் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரக்த்திற்கு சென்றடைந்துள்ளனர். ஐபிஎல் வீரர்கள் அனைவரும் ஒரு வாரகால தனிமைபடுத்தப்பட்டு பின்னர் பயிற்சியை மேற்கொள்ளுவார்கள் என எதிர்பாரக்கப்படுகின்றது.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய பவுலிங் பயிற்சியாளரை அணி நீர்வாகம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரியன் ஹாரிஸ்யை நியமித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பவுலிங் கேட்ச் ஆக செயல்படுவார்.

Next Story