Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரொனா தொற்றில் இருந்து மீண்ட கிரிஸ் கெய்ல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பயிற்சி மேற்கொள்ள யூஏஇ பயணம்.!

கொரொனா தொற்றில் இருந்து மீண்ட கிரிஸ் கெய்ல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பயிற்சி மேற்கொள்ள யூஏஇ பயணம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  25 Aug 2020 1:00 PM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் கொரொனா தொற்று காரணமாக கடும் கட்டுபாடுகளுடன் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் என மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவாகவே இருப்பதால் இன்னும் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு தனி விமானங்கள் மூலம் சென்றடைந்துள்ளனர். ஐபிஎல் வீரர்கள் அனைவரும் ஒரு வாரகால தனிமைபடுத்தப்பட்டு பின்னர் பயிற்சியை மேற்கொள்ளுவார்கள் என எதிர்பாரக்கப்படுகின்றது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் நட்சத்திர பேட்மேன் கிரிஸ் கெய்ல் ஏற்கனவே உஷேன் போல்ட் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற போது கொரோனா தொற்று உறுதியானது. அதன் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த கெய்ல் தற்பொழுது செய்யப்பட்ட கொரொனா பறிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதை தொடர்ந்து சில தினங்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இணைவார் என கூறப்படுகின்றது. கிரிஸ் கெய்ல் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Next Story