Top
undefined
Begin typing your search above and press return to search.

லேவிஸின் அதிரடி ஆட்டத்தால் செயின்ட் கிட்ஸ் அணி முதல் வெற்றி பெற்றது.!

லேவிஸின் அதிரடி ஆட்டத்தால் செயின்ட் கிட்ஸ் அணி முதல் வெற்றி பெற்றது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  26 Aug 2020 3:30 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 11வது லீக் போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான பார்பாடாஸ் ட்ரைடென்ஸ் அணியும் ரயாட் எம்ரிட் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் மற்றும் நிவிஸ் பேட்ரியட்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் முதலில் இறங்கிய பார்பாடாஸ் அணியில் தொடக்க வீரர்கள் சார்லஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சார்லஸ் 24 ரன்னிலும் ஷாய் ஹோப் 29 ரன்னிலும் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய கைல் மேயர்ஸ் 22 ரன்னிலும் கேப்டன் ஹோல்டர் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 2 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து ஜோடி சேர்ந்த கோரி ஆன்டர்சன் மற்றும் நர்ஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த பார்பாடாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 151-7 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் களம் இறங்கிய செயின்ட் அணியில் தொடக்க வீரர்கள் கிரிஸ் லீண் மற்றும் எவின் லேவிஸ் இருவரும் களம் இறங்கினர். கிரிஸ் லீண் 16 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் எவின் லேவிஸ் ரூத்ரதாண்டவம் ஆடினார். அதிரடியாக விளையாடிய லேவிஸ் அரைசதம் வீளாசினார். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த லேவிஸ் 89 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பென் டங்க் இரண்டு சிக்ஸர்கள் அடித்து வெற்றியை எட்டினார். ஆட்டநாயகனாக லேவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story